நம்பிக்கையுடன் வாருங்கள்... அருள் பெறுங்கள்... கருப்பசாமியின் அருள்வாக்கு உங்களைக் காக்கும்
அன்னூர், அல்லப்பாளையம், பிரிஸ்டிஜ் பார்க்-ல் அமைந்துள்ள ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி அறக்கட்டளை ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு கருப்பசாமியின் அருள்வாக்கு மற்றும் அனைத்து பூஜைகளும் பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெறுகின்றன.
தென்னிந்திய மரபுப்படி கருப்பசாமி கிராம காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார். பக்தர்களுக்கு பாதுகாப்பும் அருளும் வழங்கும் சக்திமிக்க தெய்வம்.
அருள்வாக்கு என்பது தெய்வீக வாக்கு - கருப்பசாமி சுவாமியின் மூலம் பக்தர்களுக்கு வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது.
பக்தர்களின் துன்பங்களைத் தீர்த்து, நல்வழிப்படுத்தி, அருள்வாக்கு மூலம் ஆன்மீக வழிகாட்டுதல் அளிப்பதே இந்த பீடத்தின் முக்கிய நோக்கமாகும்.
அருள்வாக்கு பீடத்தின் ஆன்மீகத் தலைவர்
ஏழாவது தலைமுறை அருள்வாக்கு பீடாதிபதி
முன்னோர்களான சுப்பையா பூசாரி வழியில் ஆறு தலைமுறைகளைத் தாண்டி, ஏழாவது தலைமுறையாக ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி அருள்வாக்கு பீடத்தை வழிநடத்துகிறார் பாண்டி பூசாரி. சுவாமியின் உத்தரவுப்படி அருள்வாக்கு வழங்கி, வாழ்வளிக்கும் காளி மற்றும் கோட்டை முனீஸ்வரன் திருவருளால் பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி நல்வழி காட்டுகிறார்.




இருபத்தோரு சேனை அறுபத்தோரு பந்திக்கு அதிபதியான ஐயனார் (ஐயப்பன்) சேனாதிபதியான கரந்த மலையில் வீற்றிருக்கும் செக்கடி கருப்பசாமி எனும் ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி அருளால் ஆறு தலைமுறை தாண்டி முன்னோர்களான சுப்பையா பூசாரி வழியில் ஏழாவது தலைமுறையாக பாண்டி பூசாரி கருப்பசாமி அருள் வாக்கில் ஐயாவின் உத்தரவுபடி அமைக்கப்பட்டது இந்த அருள்வாக்கு பீடம்.
கோவை மாவட்டம், அன்னூர் பகுதி அல்லப்பாளையம், பிரிஸ்டிஜ் பார்க்-ல் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி மற்றும் வாழ்வளிக்கும் காளி, கோட்டை முனீஸ்வரன் மற்றும் ஆறு தலைமுறை அருள்வாக்கு சாமி ஆடிகள் மகாமுனி சித்தர்களாக சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டி பூசாரி அருள் வாக்கில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் அருள்வாக்கு பீடமாக மக்களால் போற்றப்படுகிறது.
இருபத்தோரு சேனை அறுபத்தோரு பந்திக்கு அதிபதியான ஐயனார் (ஐயப்பன்) சேனாதிபதியான கரந்த மலையில் வீற்றிருக்கும் செக்கடி கருப்பசாமி எனும் ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி அருளால் இந்த அருள்வாக்கு பீடம் அமைக்கப்பட்டது.
ஆறு தலைமுறை தாண்டி முன்னோர்களான சுப்பையா பூசாரி வழியில் ஏழாவது தலைமுறையாக பாண்டி பூசாரி அவர்கள் கருப்பசாமி ஐயாவின் உத்தரவுபடி அருள்வாக்கு வழங்கி வருகிறார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதி அல்லப்பாளையம் பிரிஸ்டிஜ் பார்க்-ல் ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி, வாழ்வளிக்கும் காளி, கோட்டை முனீஸ்வரன் மற்றும் ஆறு தலைமுறை அருள்வாக்கு சாமி ஆடிகள் மகாமுனி சித்தர்களாக சந்நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பாண்டி பூசாரி அருள் வாக்கில் பக்தர்களின் குடும்ப, தொழில், ஆரோக்கியம் மற்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் அருள்வாக்கு பீடமாக மக்களால் போற்றப்படுகிறது.
தெய்வீக வாக்கு - கருப்பசாமியின் அருள்மொழி
அருள்வாக்கு என்பது தெய்வீக வாக்கு ஆகும். கருப்பசாமி சுவாமியின் அருளால், பக்தர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு, வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு சுவாமி அருள் புரிவார்.
ஏழாவது தலைமுறை பாண்டி பூசாரி அவர்களின் தெய்வீக அருள்வாக்கில், குடும்ப நலம், தொழில் மேன்மை, சுப காரியத் தடைகள், செய்வினை மற்றும் தீராத நோய்களுக்கான பரிகார வழிகாட்டுதல்கள் பெறலாம்.
ஸ்ரீ வேலாங்காட்டு செக்கடி கருப்பசாமி, வாழ்வளிக்கும் காளி, கோட்டை முனீஸ்வரன் மற்றும் ஆறு தலைமுறை முன்னோடி சாமி ஆடிகளின் பூரண அனுக்கிரகத்தோடு அருள்வாக்கு பீடம் இயங்கி வருகிறது.
சுவாமியின் அலங்காரமும் பூஜையும்
மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு பூஜை, அலங்கார தரிசனமும் மற்றும் மாபெரும் அன்னதானமும் இத்திரு பீடத்தில் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ வேலாங்காட்டு கருப்பசாமி டிரஸ்ட், பிரிஸ்டிஜ் பார்க், அல்லப்பாளையம், அன்னூர்.
Sree Velangattu Karuppasamy Trust,
பிரிஸ்டிஜ் பார்க், அல்லப்பாளையம்,
அன்னூர்.